தொழிற்பேட்டை சாலைகள் சீரமைப்பு தொழில்முனைவோர் கோரிக்கை ஏற்பு
தொழிற்பேட்டை சாலைகள் சீரமைப்பு தொழில்முனைவோர் கோரிக்கை ஏற்பு
ADDED : ஜூன் 21, 2025 01:21 AM

சென்னை:சிறு தொழில் நிறுவனங்களின் வசதிக்காக, தமிழகத்தில் உள்ள 18 தொழிற்பேட்டைகளை, 40 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணியை, தமிழக அரசின், 'சிட்கோ' நிறுவனம் அடுத்த மாதம் முதல் துவக்க உள்ளது.
மழை உள்ளிட்டவற்றின் காரணமாக, பல தொழிற்பேட்டைகளில் சாலைகள் சேதமடைந்து உள்ளன. அவற்றை சீரமைத்து தருமாறு, சிட்கோ நிறுவனத்திடம் தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, மொத்தம் 18 தொழிற்பேட்டைகளில், 40 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகளை சிட்கோ நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
இதில் பெரும்பாலான தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. புனரமைப்பு பணியின் கீழ் சேதம்அடைந்த சாலைகளுக்குப் பதில் புதிய சாலைகள் அமைத்தல், சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்பை சரிசெய்தல் மற்றும் புதிதாக அமைத்தல், தெருவிளக்கு வசதிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த பணிகளை அடுத்த மாதம் முதல் துவக்கி, இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.40 கோடி செலவில் 18 தொழிற்பேட்டைகளை புனரமைக்க உள்ளது சிட்கோ நிறுவனம்