நடப்பாண்டின் முதல் யுனிகார்ன் அந்தஸ்தை பெற்றது 'க்ருத்ரிம்'
நடப்பாண்டின் முதல் யுனிகார்ன் அந்தஸ்தை பெற்றது 'க்ருத்ரிம்'
ADDED : ஜன 28, 2024 09:20 AM
புதுடில்லி: 'ஓலா' நிறுவனர் பவிஷ் அகர்வாலின் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனமான 'க்ருத்ரிம்' நடப்பாண்டில் இந்தியாவின் முதல் 'யுனிகார்ன்' என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
மேலும், க்ருத்ரிம், யுனிகார்ன் அந்தஸ்தை பெறும் முதல் செயற்கை நுண்ணறிவு நிறுவனமாகும்.
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 8,300 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பை கொண்டிருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், யுனிகார்ன் என்றழைக்கப்படுகிறது.
முதல் சுற்று நிதி திரட்டல் வாயிலாக, நிறுவனம் 415 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாகவும், நிறுவனத்தின் மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாகவும் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
க்ருத்ரிம் நிறுவனம் துவங்கப்பட்டு ஒரு மாத காலமே ஆகியுள்ள நிலையில், இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஏ.ஐ., மேம்பாட்டுக்காக சூப்பர் கம்ப்யூட்டர் சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுதும் தரவு மையங்களை உருவாக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
க்ருத்ரிம் தளத்துக்கு, உரையாடல்களில் பயன்படுத்தப்படும் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான துணை வார்த்தைகளில் பயிற்சி அளிக்கப்பட்டுஉள்ளது.