கடப்பாக்கம், ராமேஸ்வரத்தில் இடம் 'மஹிந்திரா ஹாலிடேஸ்' தேடுகிறது
கடப்பாக்கம், ராமேஸ்வரத்தில் இடம் 'மஹிந்திரா ஹாலிடேஸ்' தேடுகிறது
ADDED : ஜன 27, 2024 01:53 AM

சென்னை:தமிழக அரசு, தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, சென்னையில் இம்மாதம், 7, 8ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது.
அதில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில், 'மஹிந்திரா ஹாலிடேஸ் அண்டு ரிசார்ட்ஸ் இந்தியா' நிறுவனம், தமிழகத்தில், 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
இந்த முதலீட்டின் வாயிலாக, மூன்று இடங்களில் பசுமை விடுதிகள் அமைக்கப்பட உள்ளன.
அதன்படி, செங்கல் பட்டு மாவட்டம் - கடப்பாக்கம்; திண்டுக்கல் - கொடைக்கானல்; தஞ்சை - கும்பகோணம்; ராமநாதபுரம் - ராமேஸ்வரம்; கோவை மாவட்டத்தில் வால்பாறை, ஆனைமலை.
நீலகிரி மாவட்டம், முதுமலை ஆகிய இடங்களுக்கு அருகில் விடுதிகள் அமைக்க ஏற்ற இடம் இருக்கிறதா என்பதை மஹிந்திரா ஹாலிடேஸ் தேடி வருகிறது.
இடத்தை இறுதி செய்ததில் இருந்து, அடுத்த ஐந்து - ஆறு ஆண்டுகளில் விடுதிகள் அமைக்கும் பணியை துவக்கி, செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது.
மஹிந்திரா ஹாலிடேசின் முதலீடு வாயிலாக, தமிழகத்தில், 1,500 - 2,000 நபருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என, நிறுவனத்தின் தரப்பில், அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

