UPDATED : ஜன 19, 2024 05:03 PM
ADDED : ஜன 17, 2024 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், அதன் அனைத்து கார் மாடல்களின் விலையையும் உயர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல், அதன் அனைத்து வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளதாக, மாருதி கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. டாடா, ஹூண்டாய், ஆடி உள்ளிட்ட முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும், இவ்வாறு அறிவித்து இருந்தன.
இந்த நிலையில், மாருதி தற்போது இந்த விலை அதிகரிப்பை அமல்படுத்தி உள்ளது. மாருதியின் அனைத்து மாடல்களும் சராசரியாக, 0.45 சதவீத விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

