Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள்

 எண்கள்

 எண்கள்


ADDED : பிப் 21, 2026 03:09 AM

Follow on Google

ADDED : பிப் 21, 2026 03:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

28,748

நாடு முழுதும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 14 துறைகளுக்கு கடந்தாண்டு டிசம்பர் வரை மத்திய அரசு அளித்த கோடி ரூபாய் இது.

பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ் எலெக்ட்ரானிக்ஸ், பார்மா உள்ளிட்ட 14 துறைகளைச் சேர்ந்த 836 நிறுவனங்கள், ஒட்டுமொத்தமாக 2.16 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. இதனால், 14.39 லட்சம் பேருக்கு மேல் வேலை கிடைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

27,000

அசாமில் கிட்டத்தட்ட 27,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள டாடாவின் புதிய ஆலையில், குவால்காமின் ஆட்டோமோட்டிவ் மாட்யூல்கள் தயாரிக்க இருப்பதாக குவால்காம் டெக்னாலஜிஸ் அறிவித்துள்ளது. இதற்காக, டாடா எலெக்ட்ரானிக்ஸ் உடன் குவால்காம் கைகோர்த்துள்ளது.

இங்கு இந்திய மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப, டிஜிட்டல் காக்பிட், இன்போடெயின்மென்ட் உள்ளிட்ட மாட்யூல்கள் தயாரிக்கப்பட உள்ளன.

64,52,000

கடந்த நிதியாண்டில் வருவாய் அடிப்படையில், முதல்முறையாக அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்தை, அமேஸான் முந்தியுள்ளது.

கடந்த நிதியாண்டில், அமேஸானின் ஆன்லைன் வர்த்தகம் மட்டுமின்றி, விளம்பர வருமானம் கணிசமாக அதிகரித்திருந்தன. வால்மார்ட் கிட்டத்தட்ட 64.18 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய நிலையில், அமேஸான் 64.52 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap