உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 17, 2026 06:49 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: வெங்காயம் விலை கடந்த 9 நாட்களில் 9 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகார துறை செயலர் நிதி காரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுதும் வெங்காயத்தின் சில்லரை விலை சராசரியாக 53.92 ரூபாயாக உயர்ந்தது. இது கடந்த மாதத்தை விட 48 சதவீதமும், கடந்தாண்டை விட 94 சதவீதமும் அதிகம். வெங்காயத்தின் விலையை குறைக்க, கிலோ 35 ரூபாய்க்கு அரசு கூட்டுறவு அமைப்புகள் வாயிலாக நாடு முழுதும் 48 நகரங்களில் விற்பனை செய்யப்பட்டது.
இதன் காரணமாக மொத்த வெங்காய விலை குறைந்து, சில்லரை விலையில் அதன் தாக்கம் காணப்படுகிறது. கடந்த 9 நாட்களில் 9 சதவீதம் விலை குறைந்துள்ளது. அரசு கிடங்குகளில் தற்போது 1.21 லட்சம் டன் வெங்காயம் இருப்பு உள்ளது. மொத்த விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
