'பாரத் டெக்ஸ்' ஜவுளி கண்காட்சி பிப்., 26ல் பிரதமர் துவக்குகிறார்
'பாரத் டெக்ஸ்' ஜவுளி கண்காட்சி பிப்., 26ல் பிரதமர் துவக்குகிறார்
ADDED : பிப் 24, 2024 01:53 AM

புதுடில்லி:சர்வதேச ஜவுளி கண்காட்சியை பிரதமர் மோடி நாளை மறுநாள் புதுடில்லியில் துவக்கி வைக்க உள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜவுளித் துறை அமைச்சக செயலர் ரச்னா ஷா தெரிவித்துள்ளதாவது:
'பாரத் டெக்ஸ்' எனும் இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி கண்காட்சியை, பிரதமர் மோடி நாளை மறுநாள் பிப்., 26ம் தேதி புதுடில்லியில் துவக்கி வைக்கிறார்.
இக்கண்காட்சியில் 100 நாடுகளைச் சேர்ந்த 3,000த்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பங்கேற்கின்றனர். இக்கண்காட்சி கிட்டத்தட்ட, 22 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெற உள்ளது.
வருகிற திங்கட்கிழமை துவங்கி நான்கு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், சர்வதேச நாடுகளுடனான 46 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
ஜவுளித் துறைக்கான உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்ட பயனாளி களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளை தீர்க்க அவர்களுடன் இணைந்து அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.