தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'கோல் எக்ஸ்சேஞ்ச்' துவங்குவதில் ஆர்வம் காட்டாத பி.எஸ்.இ.,

 'கோல் எக்ஸ்சேஞ்ச்' துவங்குவதில் ஆர்வம் காட்டாத பி.எஸ்.இ.,

 'கோல் எக்ஸ்சேஞ்ச்' துவங்குவதில் ஆர்வம் காட்டாத பி.எஸ்.இ.,


UPDATED : ஏப் 28, 2026 02:48 AM

ADDED : ஏப் 28, 2026 02:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2026 02:48 AM ADDED : ஏப் 28, 2026 02:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கோ ல் எக்ஸ்சேஞ்ச்' துவங்க என்.எஸ்.இ., மற்றும் எம்.சி.எக்ஸ்.,க்கு செபி அனுமதி வழங்கியுள்ள நிலையில், இதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

மாறாக, தான் 'டெரிவேட்டிவ்ஸ் மற்றும் கேஷ் மார்க்கெட்' வர்த்தகத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக, செபியிடம் அனுமதி பெற்று உள்ளதாகவும் பி.எஸ்.இ., கூறியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள 14 முக்கிய நிறுவனங்களை உள்ளடக்கிய 'போக்கஸ்டு ஐ.டி., இண்டெக்ஸ்' சார்ந்த டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களை, வரும் மே மாதம் முதல் துவங்க பி.எஸ்.இ., திட்டமிட்டு வருகிறது.



என்.எஸ்.இ., மற்றும் எம்.சி.எக்ஸ்., ஆகிய இரு சந்தைகளும் தனித்தனியாக கோல் எக்ஸ்சேஞ்ச் துவங்க உள்ளன. அதற்காக, செபியிடம் அனுமதி பெற்றுள்ள நிலையில், தாங்கள் தனித்தனியாக துவங்கும் கோல் எக்ஸ்சேஞ்சுக்கு தலா 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us