
தங்கம்
அதிகரித்த தங்க முதலீடு
ச ர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்து அவுன்ஸ் 3,670 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த புதன் கிழமை அன்று நடைபெற்ற அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித கொள்கை கூட்டத்தில், எதிர்பார்த்தபடி வட்டி விகிதம் 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 4 - 4.25 சதவீதமாகி உள்ளது.
வரும் காலங்களில், அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள், வட்டி விகித கொள்கையை தீர்மானிக்கும் என்பதால், சந்தையில் முதலீட்டாளர்கள் மற்றும் வியாபாரிகள் அதை கருத்தில் கொண்டு தங்கம் மீதான முதலீட்டை அதிகப்படுத்தினர்.
கச்சா எண்ணெய்
அமெரிக்க கையிருப்பு சரிவு
அ மெரிக்க வட்டி விகித குறைப்பு, அமெரிக்க நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவு நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா முன்னிலை வகிக்கின்றன. கடந்த சில வாரங்களாகவே கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 6,1-66 அமெரிக்க டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
செப்டம்பர் 12-ல் முடிவடைந்த வாரத்தில் அமெரிக்க கச்சா எண்ணெய் இருப்பு 93 லட்சம் பீப்பாய் குறைந்துள்ளதாக, புதன் கிழமை வெளியிடப்பட்ட அமெரிக்க ஆற்றல் தகவல் நிர்வாகத்தின் தரவு தெரிவித்துள்ளது.
அதற்கு முந்தைய வாரத்தில் 39 லட்சம் பீப்பாய் அதிகரித்திருந்த நிலையில், இந்தக் குறைவு, கடந்த சில ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய வாராந்திர குறைப்புகளில் ஒன்றாகும்.
இதன் விளைவாக, வணிக கையிருப்பு 4,154 லட்சம் பீப்பாய்க்கு தாழ்ந்துள்ளது. இது, ஆண்டின் இதே காலகட்டத்திற்கான ஐந்து ஆண்டு சராசரியைவிட 5 சதவீதம் குறைவாகும்.
கே.முருகேஷ் குமார்
துணைத்தலைவர்,சாய்ஸ் புரோக்கிங் பிரைவேட் லிமிடெட்