தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ டிவிடெண்டு

 டிவிடெண்டு

 டிவிடெண்டு


ADDED : மே 07, 2026 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 11:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ஆர்.எப்.,

இ ந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு 2025-26ம் நிதி ஆண்டுக்கான இறுதி டிவிடெண்டாக ஒவ்வொரு பங்குக்கும் 229 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த டிவிடெண்டு தொகையை வழங்க இந்நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்ட பிறகு, ரிக்கார்டு தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும். இதற்குமுன் இந்நிறுவனம், கடந்த 2025, நவம்பர் மாதத்தில் 3 ரூபாயும், நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்தில் 3 ரூபாயும் டிவிடெண்டு வழங்கியது.

டி.சி.எஸ்.,

இ ந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு பங்குக்கும் 31 ரூபாய் 'டிவிடெண்டு' வழங்குவதற்கு முடிவு செய்திருந்த நிலையில், டிவிடெண்டு பெறுவதற்கான ரிக்கார்டு தேதி வரும் மே 25ம் தேதி என்று அறிவித்துள்ளது. இது, 2025-26ம் நிதியாண்டுக்கு வழங்கப்படும் இறுதி டிவிடெண்டு ஆகும். இதற்குமுன் இந்நிறுவனம் நடப்பாண்டின் ஜனவரி மாதம் இடைக்கால டிவிடெண்டாக 11 ரூபாயும், சிறப்பு டிவிடெண்டாக 46 ரூபாயும் வழங்கியது.

டாபர் இந்தியா

இ ந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு பங்குக்கும் 5.50 ரூபாய் டிவிடெண்டு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கு, இந்நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். டிவிடெண்டு பெறுவதற்கான ரிக்கார்டு தேதி உள்ளிட்ட இதர விபரங்கள் விரைவில் வெளியாகும். இதற்கு முன் டாபர் இந்தியா நிறுவனம் கடந்த 2025 ஜூலை மாதத்தில் 5.25 ரூபாயும், அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் 2.75 ரூபாயும் டிவிடெண்டு வழங்கி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us