Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ போலி வீடியோ: பி.எஸ்.இ., எச்சரிக்கை

 போலி வீடியோ: பி.எஸ்.இ., எச்சரிக்கை

 போலி வீடியோ: பி.எஸ்.இ., எச்சரிக்கை


ADDED : ஜன 13, 2026 01:55 AM

Follow on Google

ADDED : ஜன 13, 2026 01:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரி, 2026ம் ஆண்டுக்கான பங்கு பரிந்துரைகள் வழங்குவதுபோல, சமூக வலைதளங்களில் பரவிவரும் வீடியோ போலியானது என, பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

இது, டீப்-பேக் எனப்படும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.இ.,யில் பணிபுரியும் எந்த அதிகாரியும், பங்குகள் குறித்த பரிந்துரைகள் வழங்க அனுமதி கிடையாது என்றும், மும்பை பங்குச்சந்தை சி.இ.ஓ., சுந்தரராமன் மற்றும் அதிகாரிகளோ, வாட்ஸாப் அல்லது சமூக வலைதளங்கள் வாயிலாக எந்த முதலீட்டு குழுக்களையும் நடத்துவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை நீக்கவும், இதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பி.எஸ்.இ., விளக்கமளித்துள்ளது.

எனவே, இதுபோன்ற போலியான வீடியோக்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என்றும், பங்குச் சந்தை பற்றிய தகவல்களுக்கு பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடக பக்கங்களை மட்டுமே பார்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap