sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

இந்த வாரம் எப்படி இருக்கும்?

/

இந்த வாரம் எப்படி இருக்கும்?

இந்த வாரம் எப்படி இருக்கும்?

இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : அக் 19, 2025 07:42 PM

Google News

ADDED : அக் 19, 2025 07:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரும்போதே அப்பு படு உற்சாகமாக வந்தார்.

அப்பு: முதல்ல எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். வெற்றிகரமாக மூன்றாவது வாரமா, ஏற்றத்திலேயே வாரத்தை முடிச்சு வைச்சுடோமுல்ல!

டவுனு: காளைக்கு வாய்ப்புக் கிடைச்சா, கரடியை நசுக்கிடும்னு தெரியும். ஆனா, இப்படி நிப்டியை 52 வார உச்சிக்கு கொண்டுபோய் வைச்சு நசுக்குவீங்கன்னு எதிர்பார்க்கல.

அப்பு: தீபாவளி நேரமா இருக்குதுல்ல. அந்த உற்சாகமும் சந்தையில சேர்ந்துக்கிடுச்சு. அமெரிக்க சந்தைகள் வேற வெள்ளிக்கிழமை நல்லா ஏறியிருக்கு, அதான்! என்ன, நியுட்ரன் ரொம்ப அமைதியா இருக்கீங்க?

நியுட்ரன்: நமக்கு வாய்ப்பில்லாத போது, நாம அமைதியாகத்தானே இருக்கணும்! அதனால ஒரு சேஞ்சுக்கு, நீங்களே வர்றவாரம் வரப்போற பொருளாதர தரவுகள் பத்தி சொல்லுங்க, கேட்போம்.

அப்பு: சரி உத்தரவு. இன்ப்ராஸ்ட்ரக்சர் அவுட்புட், எச்.எஸ்.பி.சி., மேனுபேக்சரிங் மற்றும் சர்வீசஸ் பி.எம்.ஐ., அந்நிய செலவாணி கையிருப்பு மாதிரியான ஒன்றிரண்டு இந்திய பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்குது.

வீடுகள் விற்பனை, பணவீக்கம் எஸ் அண்டு பி., குளோபல் மேனுபேக்சரிங் மற்றும் சர்விசஸ் பி.எம்.ஐ., மாதிரியான ஒன்றிரண்டு அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வெளிவர இருக்குது. செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் முகூர்த் டிரேடிங் இருக்குது. புதன்கிழமை சந்தைக்கு விடுமுறை. அவ்வளவு தான்.



டவுனு: வர்த்தகம் செய்யற நாட்கள் குறைவா இருக்கிறதால எங்களுக்கு வாய்ப்பிருக்குமோ?

நியுட்ரன்: இல்லை, எங்களுக்கான வாய்ப்பு தான் பிரகாசமா இருக்கு!



அப்பு: லீவு தீபாவளிக்காக என்பதை மறந்துட்டீங்க சார்களே! ரிசல்ட்களுன்னு பார்த்தா கோல்கேட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், லாரெஸ் லேப்ஸ், ஐ.டி.சி., ஹோட்டல்ஸ், எஸ்.பி.ஐ., கார்டு, எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ், கோட்டக் மஹிந்திரா பேங்க் மாதிரியான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வர்ற வாரத்துல வெளிவர இருக்குது.

அதைப் பொறுத்து சின்னதா மாற்றங்கள் வரலாம். டெக்னிக்கலா ஸ்ட்ராங்கா இருக்கிறதனால, செய்திகளைப் பொறுத்தே சந்தையின் திசை இருக்க வாய்ப்பு இருக்கு.



டவுனு: நியுட்ரன், நிப்டியோட டெக்னிக்கல் சப்போர்ட், ரெசிஸ்ட்டென்ஸையாவது நீங்க சொல்லுங்க கேட்போம்.



நியுட்ரன்: வாராந்திர ரீதியா 25,250, 24,795 மற்றும் 24,520 என்ற அளவில் ஆதரவும் 25,970, 26,235 மற்றும் 26,510 என்ற அளவில் டெக்னிக்கல் தடுப்பும் இருக்க வாய்ப்பு இருக்கு.

இப்போதைக்கு 25,665-ங்கறது ஒரு முக்கிய லெவலா இருக்கு. இதுக்கு கீழே போனா மட்டும் கொஞ்சம் உஷாரா இருக்கணும்.

அப்பு: என்ன சப்போர்ட்டோ ரெசிஸ்டென்ஸோ, செவ்வாய்க்கிழமை முகூர்த் டிரேடிங் முடியற வரைக்கும், எங்க கைதான் ஓங்கியிருக்கும்.

டவுனு: வாரக்கடைசியில எங்களுக்கான வாய்ப்பு பிரகாசமா தெரியுது. ஏன்னா மூணு வாரமா ஏறியிருக்க சந்தையில எங்க கைங்கர்யம் இல்லாட்டியும், அப்புவோட ஆட்களே லாபத்தை புக் பண்ணி, கொஞ்சம் இறக்கிடுவாங்க.



அப்பு: பேச்சு வாக்குல கொடுக்க மறந்துட்டேன். இந்தாங்க எங்க வீட்டில செய்த தீபாவளி ஸ்வீட்

அப்பு அதிரசத்தை நீட்ட, மூவரும் ஆளுக்கு கொஞ்சமா சாப்பிட்டுவிட்டு கிளம்பினார்கள்.






      Dinamalar
      Follow us