தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தபால் அலுவலகங்களில் 'பான்' இனி கட்டாயம்

தபால் அலுவலகங்களில் 'பான்' இனி கட்டாயம்

தபால் அலுவலகங்களில் 'பான்' இனி கட்டாயம்

4


UPDATED : மே 02, 2026 04:15 AM

ADDED : மே 02, 2026 01:24 AM

Follow on GoogleFavourite on Google

4

UPDATED : மே 02, 2026 04:15 AM ADDED : மே 02, 2026 01:24 AM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தபால் அலுவலகங்களில் மேற்கொள்ளும் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு, 'பான்' எண்ணை குறிப்பிடுவது இனி கட்டாயம் என்று தபால் துறை அறிவித்துள்ளது.

அதிக மதிப்புள்ள நிதி பரிவர்த்தனைகளை சரியான முறையில் கண்காணிப்பதன் வாயிலாக, வரி ஏய்ப்பை தடுக்கவும், கருப்பு பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல், தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், நிதி பரிவர்த்தனைகளை முறைப்படுத்தவும் இது அவசியமாகிறது.

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்


* வருமான வரி சட்டம் 2026ன் கீழ், ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, தபால் அலுவலக பரிவர்த்தனைகளுக்கு 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயம்

* குறிப்பாக, கணக்கு தொடங்குதல், பணம் 'டிபாசிட்' செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட உயர் மதிப்புள்ள பெரிய பரிவர்த்தனைகளை மேற்கொள் வதற்கு 'பான்' எண் கட்டாயம்

* ஒருவேளை, டிபாசிட்தாரரிடம் 'பான்' எண் இல்லை எனில், அவர் வருமான வரி விதிகள் 2026 அடிப்படையில், படிவம் 97ஐ சமர்ப்பிக்க வேண்டும்

* அதில் டிபாசிட்தாரரின் பெயர், முகவரி, தொகை உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களையும் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும்

* படிவத்தையும் ஆவணங்களையும் தபால் அலுவலகங்கள் முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்பது கட்டாயம்

* 'பான்' எண் இல்லாதவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த படிவம் 60 நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக படிவம் 97, படிவம் 98 ஆகிய இரண்டு படிவங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us