ADDED : ஜூன் 13, 2026 01:18 AM

சென்னையை சேர்ந்த பிரபல 'காசாகிராண்டு பிரீமியர் பில்டர்' நிறுவனம் 1,220 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் காசாகிராண்டு நிறுவனம் ஐ.பி.ஓ., வரைவு ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 8ம் தேதி செபி ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
இந்த ஐ.பி.ஓ.,வில் 1,200 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும், 'ஓ.எப்.எஸ்.,' வழியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளும் வெளியிடப்பட உள்ளன. ஐ.பி.ஓ., வாயிலாக கிடைக்கும் மூலதனத்தில் 250 கோடி ரூபாயை கடன்களை அடைக்கவும், 650 கோடி ரூபாயை துணை நிறுவனங்களின் கடன்களை அடைக்கவும், மீதமுள்ள தொகையை பொது கார்ப்பரேட் தேவைகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை தவிர கோவை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களிலும் இந்நிறுவனம் செயல்படுகிறது.
