Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ குறுகிய வரம்புக்குள் வர்த்தகமாக வாய்ப்பு

 குறுகிய வரம்புக்குள் வர்த்தகமாக வாய்ப்பு

 குறுகிய வரம்புக்குள் வர்த்தகமாக வாய்ப்பு


ADDED : பிப் 11, 2026 01:41 AM

Follow on Google

ADDED : பிப் 11, 2026 01:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

ஆரம்பத்தில் இருந்து மதியம் ஒரு மணிவரை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த நிப்டி, பின்னர் சிறு சிறு இறக்கங்களை கண்டு, அதிலிருந்து மீண்டு, நாளின் இறுதியில் 67 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.00 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ.,150' குறியீடு குறைந்த பட்சமாக 0.23 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 13 ஏற்றத்துடனும்; 6 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 2.40 சதவிகித ஏற்றத்துடனும், 'நிப்டி பார்மா குறியீடு' அதிக பட்சமாக 0.36 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,269 பங்குகளில், 1,924 ஏற்றத்துடனும்; 1,240 இறக்கத்துடனும்; 105 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி கிட்டத்தட்ட மீண்டும் ஏறுமுகத்துக்கு வந்துவிட்டதைப்போன்ற டெக்னிக்கல் தோற்றம் உருவாகியுள்ளது. 20, 50, 100 மற்றும் 200 நாள் சராசரிகளுக்கு மேலே நிப்டி நிறைவடைந்துள்ளது. எம்.ஏ.சி.டி., 'ரேட் ஆப் சேஞ்ச்' மற்றும் 'ஸ்டோக்காஸ்டிக் ஆசிலேட்டர்'கள் ஏற்றம் தொடர்வதற்கு ஒத்துழைப்பு தரும் வகையில் இருக்கிறது. ஆர்.எஸ்.ஐ., 57 என்ற அளவில் இருப்பது, இன்னமும் நிப்டி 'ஓவர்பாட்' என்ற நிலையை எட்டவில்லை என்பதை காட்டுகிறது. செய்திகள் சாதகமாக இருந்தால் சிறிய ஏற்றமோ இல்லாவிட்டால் கன்சாலிடேஷனோ நடக்க வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap