உள்ளடக்கத்திற்கு செல்ல

வர்த்தகம் நடந்த 3,374 நிறுவனங்களின் பங்குகளில் 2,456 உயர்வுடனும், 841 சரிவுடனும், 77 மாற்றம் ஏதுமில்லாமலும் நிறைவடைந்திருந்தன. ஒரு வழியாக குறுகிய கால சராசரிகளுக்கு (14/21 இ.எம்.ஏ.,) மேலே நிப்டி நிறைவடைந்திருப்பதால், குறுகிய கால அடிப்படையில் சற்று ஏற்றம் காண்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரம், மொமெண்டம் இண்டிக்கேட்டர்கள் நியுட்ரலாக இருப்பதால், இன்னமும் டெக்னிக்கலாக பெரிய அளவிலான ஏற்றத்துக்கான வாய்ப்பு தென்படவில்லை. 24,000- லெவல் முக்கிய ஆதரவாக இருப்பதால், இதற்கு மேலே இருக்கும் வரை பெரிய வீழ்ச்சிக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். அடுத்த முக்கிய ரெசிஸ்டென்ஸ் 24,500 - 25,000 என்ற லெவலில் இருக்கிறது. இதை தாண்டினால் அடுத்த கட்ட ஏற்றம் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால், 24,000த்திற்கு கீழே சரிந்தால், மீண்டும் 23,700 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பு உள்ளது. செய்திகளை அடிப்படையாக கொண்டே அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும்.
டெக்னிக்கல் அனாலிசிஸ்: 24,000 புள்ளிகள் முக்கிய ஆதரவு நிலையாக உள்ளது
டெக்னிக்கல் அனாலிசிஸ்: 24,000 புள்ளிகள் முக்கிய ஆதரவு நிலையாக உள்ளது
UPDATED : மே 07, 2026 03:23 AM
ADDED : மே 07, 2026 03:16 AM

அ நிறம் | அளவு
138 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, 1:00 மணியளவில் 31 புள்ளிகள் அளவிலான இறக்கத்தை சந்தித்தது. பின்னர் 2:00 மணியளவில் உயர ஆரம்பித்து, நாளின் இறுதியில் 298 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் உயர்வுடன் முடிந்தன. இவற்றில், 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ., 150' குறியீடு குறைந்தபட்சமாக 1.25 சதவீதமும், 'நிப்டி மிட்கேப்50' குறியீடு அதிகபட்சமாக 2.21 சதவீதமும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 18 குறியீடுகள் உயர்ந்தும், 1 குறியீடு குறைந்தும் முடிந்தன. இவற்றில், 'நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு' 0.26 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி மிட் ஸ்மால் ஐ.டி., அண்டு டெலிகாம் ஐ.டி., குறியீடு' அதிகபட்சமாக 3.06 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
![]() |

