தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'மணிபால்' மீது புகார் ஐ.பி.ஓ.,வை பாதிக்குமா?

 'மணிபால்' மீது புகார் ஐ.பி.ஓ.,வை பாதிக்குமா?

 'மணிபால்' மீது புகார் ஐ.பி.ஓ.,வை பாதிக்குமா?


ADDED : ஜூலை 28, 2026 12:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 12:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வரும் 'மணிபால் ஹெல்த்' நிறுவனத்தின் கொல்கட்டா துணை நிறுவனம் தொடர்பாக சில அமெரிக்க முதலீட்டாளர்கள் அளித்துள்ள புகார் கவனம் பெற்றுள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டுகள் பழைய நிர்வாகம் தொடர்பானவை என்றும், ஐ.பி.ஓ., ஆவணங்களில் இதுகுறித்த அனைத்து தகவல்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சமீர் அகர்வால், மணிபால் ஹெல்த் நிறுவனம் 2024 - 25ம் நிதியாண்டில்தான் அந்த நிறுவனத்தில் 84.95 சதவீத பங்குகளை கையகப்படுத்தியதாகவும், தற்போது எழுப்பப்பட்டுள்ள புகார்கள் முந்தைய நிர்வாகம் தொடர்பானவை என்றும் விளக்கம் அளித்தார்.

மேலும், சாதாரண பங்குகளுக்கு நிலையான வட்டி தர சட்டத்தில் இடமில்லை என கூறிய அவர், முதலீட்டாளர் அந்தஸ்து மாற்றப்பட்டது சிறிய எழுத்து பிழை என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம், ஐ.பி.ஓ., மீதான முதலீட்டாளர்களின் ஆர்வத்தை பாதிக்காது என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us