/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சீன ரசாயன இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி
/
சீன ரசாயன இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி
சீன ரசாயன இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி
சீன ரசாயன இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி
ADDED : ஜூன் 25, 2025 12:55 AM

புதுடில்லி:சீனா உள்ளிட்ட அன்னிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4 ரசாயன பொருட்களுக்கு, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், வருவாய் துறை இரண்டும் தனித்தனியே, ஐந்து ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளதாக தெரிவித்துள்ளன.
களைக்கொல்லியில் பயன்படுத்தப்படும் 'பெடா' எனும் ரசாயனம், மருந்து துறையில் பயன்படுத்தப்படும் அசிட்டோனிட்ரைல், விட்டமின் - ஏ பால்மிடேட் மற்றும் கரையாத கந்தகம் உள்ளிட்ட 4 வகை ரசாயன பொருட்களுக்கு, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நான்கு வகை ரசாயன பொருட்கள் சீனாவில் இருந்தும், வேறு சில நாடுகளில் இருந்தும் மலிவான விலையில் இறக்குமதியாவது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், டி.ஜி.டி.ஆர்., எனும் வர்த்தக தீர்வுகள் இயக்குனரகம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியமும், வருவாய் துறையும் தனித்தனியே 5 ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரியினை விதித்துள்ளன.