/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எஸ்.ஐ.பி., முதலீட்டில் அதிகரிக்கும் ஆர்வம்
/
எஸ்.ஐ.பி., முதலீட்டில் அதிகரிக்கும் ஆர்வம்
ADDED : பிப் 12, 2024 01:13 AM

ஏற்ற இறக்கமான நிலையை மீறி, பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதன் அடையாள மாக, எஸ்.ஐ.பி., முறையிலான முதலீடு மற்றும் டிமெட் கணக்குகள் அதிகரித்துள்ளன.
மியூச்சுவல் பண்ட்களில் சீராக முதலீடு செய்யும் வாய்ப்பாக அமையும் எஸ்.ஐ.பி., முறையில் ஜனவரி மாதம் 51.84 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இது, முந்தைய மாதத்தைவிட 29 சதவீதம் அதிகமாகும். மேலும், எஸ்.ஐ.பி., மொத்த கணக்குகள் எண்ணிக்கை 7.92 கோடியாக உள்ளன.
நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 3.36 கோடி எஸ்.ஐ.பி., புதிய கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், 23 லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் எஸ்.ஐ.பி., முதலீட்டை விலக்கி கொண்டு உள்ளனர்.
வலுவான பொருளாதார அடிப்படை அம்சங்கள், வர்த்தக நிறுவனங்களின் வருவாய், குறைவான பணவீக்கம் ஆகிய அம்சங்கள், முதலீட்டாளர்கள் சந்தை மீது நம்பிக்கை வைப்பதற்கான காரணங்களாக கருதப்படுகின்றன.
முதலீட்டாளர்கள் நம்பிக்கை அதிகரிப்பதன் அடையாளமாக புதிய முதலீட்டாளர்கள் சந்தைக்கு வருவதும் அதிகரித்துள்ளது. பங்கு முதலீட்டிற்கான டிமெட் கணக்கு துவக்கப்படுவதும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு பங்குச் சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டி 19 மற்றும் 20 சதவீதம் உயர்ந்தன.

