ADDED : ஜன 26, 2024 02:23 AM

கடந்த 2016ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம், ஒரு டிஜிட்டல் சர்வீஸ் வழங்குனராகும். வங்கிகள் குறைவாக உள்ள பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகளின் சார்பில் இந்நிறுவனம் நிதி மற்றும் வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனம் பி.எல்.எஸ்., இன்டர்நேஷனல் சர்வீசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். நகர்ப்புற, கிராமப்புற மற்றும் தொலைதுாரப் பகுதிகளில், அத்தியாவசிய பொது பயன்பாட்டு சேவைகள் மற்றும் சமூக நலத் திட்டங்களை வழங்குவதற்கான சேவைகளையும், பி.எல்.அஸ்., இ - சர்வீசஸ் வழங்கி வருகிறது.
திரட்டப்படவுள்ள நிதி, நிறுவனத்தின் தற்போதைய தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, புதிய தளங்களை உருவாக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நிலவரம்
கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி நிலவரப்படி இந்நிறுவனத்தின் வருவாய் 246 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 20 கோடி ரூபாய்.
துவங்கும் நாள் : 30.01.2024
முடியும் நாள் : 01.02.2024
பட்டியலிடும் நாள் : 06.02.2024
பட்டியலிடப்படும் சந்தை : பி.எஸ்.இ., என்.எஸ்.இ.,
பங்கு விலை : 129 - 135 ரூபாய்
பங்கின் முகமதிப்பு : ரூ.10
புதிய பங்கு விற்பனை : 2.30 கோடி
மொத்த பங்கு விற்பனை : ரூ.310.90 கோடி

