ADDED : ஜூன் 18, 2025 12:39 AM

19,239
கடந்த மே மாதத்தில், ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி 15.81 சதவீதம் குறைந்து, 19,239 கோடி ரூபாயாக இருந்ததாக, நவரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தரவுகள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டின் இதேகாலகட்டத்தில், 22,851 கோடி ரூபாயாக இருந்தது. இருப்பினும், வைரங்கள் ஏற்றுமதியைக் காட்டிலும், தங்க நகைகள் ஏற்றுமதி கடந்த மாதம் 17.24 சதவீதம் அதிகரித்து, 8,479 கோடி ரூபாயாக இருந்தது. இது முந்தைய ஆண்டில், 7,232 கோடி ரூபாயாக இருந்தது.
4,100
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கான மேம்பட்ட சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை வழங்குவதற்காக, சீமென்ஸ் நிறுவனத்தின் தலைமையிலான கூட்டமைப்பு, என்.எச்.எஸ்.ஆர்.சி.எல்., என்ற தேசிய அதிவேக ரயில் கார்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து 4,100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைபெற்றுள்ளது. இந்த
ஒப்பந்தத்தில் சீமென்ஸ் நிறுவனத்தின் பங்கு 1,230 கோடி ரூபாயாகும். இதுகுறித்த விபரங்களை பங்கு சந்தை தாக்கலில் சீமென்ஸ் தெரிவித்துள்ளது.

