/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
காகிதமற்ற சுங்க நடைமுறை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சவால்
/
காகிதமற்ற சுங்க நடைமுறை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சவால்
காகிதமற்ற சுங்க நடைமுறை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சவால்
காகிதமற்ற சுங்க நடைமுறை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சவால்
ADDED : ஜன 11, 2024 01:37 AM

புதுடில்லி:நடப்பாண்டு ஜூன் மாதம் 3ம் தேதி முதல், ஐரோப்பிய யூனியன், காகிதமற்ற சுங்க செயல்முறைக்கு மாற உள்ளதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் இந்த புதிய விதிகளை பின்பற்ற தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன், இந்தியாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் 17 சதவீத பங்கு வகிப்பதால், அதன் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த 2022 - 23 நிதியாண்டில், நாட்டின் மொத்த சரக்கு ஏற்றுமதி 37.43 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதில், 6.23 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள், ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஐரோப்பிய யூனியன், அதன் இறக்குமதிகளுக்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. கடந்த 2021 மார்ச் மாதம், முதற்கட்டமாக விமான அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் டெலிவரிகளுக்கும், பின்னர் விமான சரக்குகளுக்கும் கட்டுப்பாடுகள் விதித்தது.
தற்போது, இரண்டாம் கட்டமாக இறக்குமதி கட்டுப்பாட்டு திட்டங்களை வரும் ஜூன் 3ம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. கப்பல்கள், ரயில்கள், லாரிகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான இறக்குமதிகளுக்கும் இந்த கட்டுப் பாடுகள் பொருந்தும்.
இந்த புதிய நடைமுறை, ஐரோப்பிய யூனியனை காகிதமற்ற இறக்குமதியை நோக்கி நகர்த்த உதவுவதாகவும்; பெரும்பாலான பொருட்களுக்கான காகித தேவையை நீக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

