திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம் / பங்கு சந்தை நிலவரம்
/
செய்திகள்
பங்கு வர்த்தகம்
பங்கு சந்தை நிலவரம்
ADDED : பிப் 29, 2024 11:34 PM
நேற்று பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவை, டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களின் மாதாந்திர காலாவதிக்கு மத்தி யில், மிகவும் ஏற்ற இறக்கமான நிலையில் இருந்து, பிறகு வர்த்தக இறுதியில் லாபத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கிட்டத்தட்ட 195 புள்ளிகள் அளவுக்கும், நிப்டி 32 புள்ளிகள் அளவுக்கும் வர்த்தக இறுதியில் உயர்ந்து நிலைபெற்றது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, முக்கியமான துறைகளின் வளர்ச்சி ஆகியற்றுக்கான தரவுகள் வெளியாக இருந்ததை அடுத்து, முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை உணர்வுடனேயே சந்தையை அணுகினர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது, சந்தை உயர முக்கிய காரணமாக இருந்தது. இந்நிறுவனம், வால்ட் டிஸ்னியுடன் இணைந்து, இந்தியாவில் 70,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஊடக செயல்பாடுகளில் ஈடுபட இருப்பதாக அறிவித்ததை அடுத்து, ரிலையன்ஸ் பங்குகள், வர்த்தகத்தின் இடையே இரண்டு சதவீதம் அளவுக்கு விலை உயர்வைக் கண்டது மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் குறியீடு 0.84 சதவீதமும்; ஸ்மால்கேப் 0.50 சதவீதமும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஹாங்காங் ஆகியவை சரிவைக் கண்டன. ஷாங்காய் சந்தை மட்டுமே உயர்வை சந்தித்தது. ஐரோப்பிய சந்தைகள் ஓரளவு சாதகமாக இருந்தன. புதன் அன்று அமெரிக்க சந்தை இறக்கத்தை சந்தித்தது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் புதன் அன்று கிட்டத்தட்ட 1,879 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துஉள்ளனர்.
(மும்பை பங்குச் சந்தை) ஏற்றம் கண்டவை : 50%இறக்கம் கண்டவை : 47%மாற்றம் காணாதவை: 3%
முந்தைய முடிவு : 21,951.15நேற்றைய முடிவு: 21,982.00மாற்றம்: 31.65 ஏற்றம் பச்சை
முந்தைய முடிவு: 72,304.88நேற்றைய முடிவு: 72,500.30மாற்றம்: 195.42 ஏற்றம் பச்சை
அதானி என்டர்பிரைசஸ் டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் இண்டஸ்இண்ட் பேங்க் மஹிந்திரா அண்டு மஹிந்திரா அதானி போர்ட்ஸ்
அப்போலோ ஹாஸ்பிட்டல் பஜாஜ் ஆட்டோ எல்.டி.ஐ., மைண்டுட்ரீ ஐச்சர் மோட்டார்ஸ் டெக் மஹிந்திரா