ADDED : மே 16, 2025 01:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1,000
கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை விற்பது அல்லது குத்தகைக்கு விடுவதன் வாயிலாக, நிதி சிக்கலில் சிக்கி தவிக்கும் பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களின் கடன் சுமையை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
1,00,000
என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் பங்குதாரர்களின் எண்ணிக்கை. பட்டியலிடப்படாத நிறுவன பங்குதாரர்கள் எண்ணிக்கையில் இது மிக அதிகம்.
3,75,000
பொது சார்ஜிங் மையங்கள், 2030ம் ஆண்டின் இறுதிக்குள் அமைக்கப்பட்டுவிடும் என, ஐ.இ.ஏ., எனப்படும் சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
4,87,000
கோடி ரூபாய் மதிப்புடன், உலகளவில், முதல் 100 மதிப்பு மிக்க பிராண்டுகளில் ஒன்றாக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இடம் பிடித்துள்ளது.

