டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி 23,116 புள்ளிகளுக்கு மேல் நீடித்தால் மீட்சி தொடரும்
டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி 23,116 புள்ளிகளுக்கு மேல் நீடித்தால் மீட்சி தொடரும்
UPDATED : செப் 17, 2026 03:00 AM
ADDED : செப் 17, 2026 02:47 AM

நேற்று 83 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி 9.45 மணியளவில் ஏறிய புள்ளிகள் அனைத்தையும் இழந்தது. அதன் பின்னர் மீண்டும் ஏற தொடங்கிய நிலையில் நாளின் இறுதியில் 99 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17-ல் 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 8 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.37 சதவீத உயர்வுடனும், 'நிப்டி ஸ்மால்கேப்100' குறியீடு அதிக பட்சமாக 0.18 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 14 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு அதிக பட்சமாக 1.63 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 1.58 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,-யில் வர்த்தகம் நடந்த 3,662 நிறுவனங்களின் பங்குகளில் 1,688 ஏற்றத்துடனும்; 1,851 இறக்கத்துடனும்; 123 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
நிப்டியின் ஆர்.எஸ்.ஐ., ஸ்டோக்காஸ்ட்டிக் மற்றும் ஸ்டோக்காஸ்ட்டிக் %கே மற்றும் %டி போன்ற அளவீடுகள் ஓவர் சோல்டு நிலைமைக்குள் சென்றிருப்பதையே காட்டுகிறது. ஆர்.எஸ்.ஐ.,-யும் இதையே உணர்த்துகிறது. எனவே, இன்னும் சிறிய அளவிலான பவுன்ஸ் பேக் தொடர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.
இருப்பினும் எம்.ஏ.சி.டி., (-241.42), இ.எம்.ஏ., எம்.ஏ.சி.டி., (-157.95), எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (-83.47) போன்றவையும் ஆர்.ஓ.சி.,யும் (-3.96) போன்றவை மொமென்டம் இன்னும் பலகீனமாக இருப்பதையே காட்டுகின்றன.
![]() |
இந்த டெக்னிக்கல் சூழலில் 23,116 உடனடி சப்போர்ட்டாக இருக்கிறது. இதற்கு மேலே நிப்டி தொடரும் வரை டெக்னிக்கல் ரெக்கவரி தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது எனலாம். டெக்னிக்கல் சூழல் ஏற்றத்துக்கு சாதகமாக மாறுவதற்கு நிப்டி 23,392-23,644 என்ற லெவல்தனை கடந்து மேலே செல்லவேண்டும். ஒருவேளை மீண்டும் இறங்க ஆரம்பித்து 23,116-க்கு கீழே இறங்கினால் நிப்டியில் பலவீனம் தொடர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது எனலாம்.

