அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.,சில் சேரலாம் : தடையை நீக்கியது மத்திய அரசு
அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.,சில் சேரலாம் : தடையை நீக்கியது மத்திய அரசு
ADDED : ஜூலை 22, 2024 08:51 PM

புதுடில்லி: அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர விதிக்கப்பட்ட தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1960 களில் இந்திரா பிரதமராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. முன்னதாக 1948 ல் தேசதந்தை மகாத்மா காந்தி படுகொலைக்கு பின் அந்த அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை வித்தார்.
இந்நிலையில் 3 வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி தலைமையிலான பா.ஜ., அரசு இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இனி அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரலாம் .அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 58 ஆண்டுகால தடை நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தடையை நீக்கியதற்கு காங்.,.உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.