‛நீட்' தேர்வுக்கு எதிராக கர்நாடக அமைச்சரவை தீர்மானம்
‛நீட்' தேர்வுக்கு எதிராக கர்நாடக அமைச்சரவை தீர்மானம்
ADDED : ஜூலை 22, 2024 10:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: நீர் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் விலக்கு கோரி தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக கொண்டு வரப்பட்டது. .
இந்நிலையில் கர்நாடகா அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் கூடியது. இதில் நீட் தேர்வு, ஒரு தேசம், ஒரு தேர்தல் ஆகியவற்றிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் சட்டசபை கூட்டத்தை கூட்டி நீட் தேர்வுக்கு எதிராக மசோதா கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.