sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஷிராடிகாட், சார்மாடி சாலைகளில் நிலச்சரிவு; மண்ணில் சிக்கிய 6 வாகனங்கள் பத்திரமாக மீட்பு

/

ஷிராடிகாட், சார்மாடி சாலைகளில் நிலச்சரிவு; மண்ணில் சிக்கிய 6 வாகனங்கள் பத்திரமாக மீட்பு

ஷிராடிகாட், சார்மாடி சாலைகளில் நிலச்சரிவு; மண்ணில் சிக்கிய 6 வாகனங்கள் பத்திரமாக மீட்பு

ஷிராடிகாட், சார்மாடி சாலைகளில் நிலச்சரிவு; மண்ணில் சிக்கிய 6 வாகனங்கள் பத்திரமாக மீட்பு


ADDED : ஜூலை 31, 2024 06:05 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாசன் : ஹாசன், சிக்கமகளூரு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், ஷிராடி காட், சார்மாடி வனப்பகுதி சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ்., அணை, கபினி அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 2 லட்சம் கன அடி உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது அப்பகுதிகளில் மழை குறைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் மழை தீவிரம் எடுத்துள்ளது. குறிப்பாக மலைநாடு பகுதிகளான ஹாசன், சிக்கமகளூரில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

* சாலை துண்டிப்பு

சக்லேஸ்பூர் தாலுகா, கும்பாரடி ஹார்லி எஸ்டேட் இடையில் நேற்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு -- மங்களூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 75ல் சக்லேஸ்பூர் அருகே ஷிராடி காட் வனப்பகுதி சாலையில் நேற்று மதியம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

அந்த வழியாக சென்ற இரண்டு கார்கள், ஒரு டேங்கர் உட்பட ஆறு வாகனங்கள் மண்ணில் சிக்கின. அதிகாரிகள் அங்கு சென்று வாகனங்களுக்குள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.

ஜே.சி.பி., மூலம் மண் அகற்றப்பட்டு, வாகனங்களும் மீட்கப்பட்டன. ஷிராடி வனப்பகுதி சாலையில் மேலும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அந்த வழியாக செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* விடுமுறை

தொடர் கனமழையால் ஹாசன் கொரூரில் உள்ள ஹேமாவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று அந்த அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஹேமாவதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிக்கமகளூரில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை விடாமல் கன மழை கொட்டி தீர்த்தது. மூடிகெரே, கொப்பா, என்.ஆர்.புரா, கலசா, சிருங்கேரி தாலுகாக்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டது.

மேற்கண்ட ஐந்து தாலுகாக்கள், சிக்கமகளூரு தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மூடிகெரே ஷிராடி வனப்பகுதி சாலையிலும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

* 'ரெட் அலெர்ட்'

இன்னொரு மலைநாடு மாவட்டமான குடகிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஹாரங்கி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் குஷால் நகரில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வீடுகளில் சிக்கித் தவித்த 19 பேர் நேற்று இரவு மீட்கப்பட்டனர். கனமழை எதிரொலியாக இன்றும், நாளையும் குடகு மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியர் யாரும் வர வேண்டாம் என கலெக்டர் வெங்கட் ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

* நெற்பயிர்கள் நாசம்

ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள சீனிவாசா அக்ரஹாரா, சிக்கபாளையா, மஹாதேவபுரா, சாந்தி கொப்பலு உள்ளிட்ட கிராமங்களில் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் நெற்பயிர்கள், கனகாம்பர செடிகள் அழுகி நாசமாகின.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பத்திரமான இடங்களுக்கு செல்லும்படி, கலெக்டர் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* பெங்களூரிலும் மழை

அண்டை மாநிலமான மஹாராஷ்டிராவில் மழை குறைந்தாலும், அங்குள்ள அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதால், கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கோடி தாலுகாவில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

பெங்களூரிலும் நேற்று முன்தினம் இரவு ராஜாஜி நகர், கே.பி., அக்ரஹாரா, விஜயநகர், கோவிந்தராஜ் நகர், மெஜஸ்டிக், எச்.ஏ.எல்., எலஹங்கா, பொம்மனஹள்ளி, பனசங்கரி மற்றும் நகரின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது.

...பாக்ஸ்...

2 லட்சம் கன அடி

தமிழகத்திற்கு திறப்பு

மொத்தம் 49.45 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ்., அணையில் 46.70 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 68,192 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,07,783 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல், 19.52 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 18.95 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 57,819 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,87,783 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரவில், இது 2 லட்சம் கன அடியை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அணை நிலவரம்

கர்நாடகாவின் முக்கிய அணைகளின் நேற்றைய நீர் மட்டம்

அணை மொத்த கொள்ளளவு (டி.எம்.சி.,) இருப்பு (டி.எம்.சி.,) வரத்து (கன அடிகளில்) வெளியேற்றம் (கன அடிகளில்)

லிங்கனமக்கி 151.75 124.60 50,710 3,757

சுபா 145.33 100.14 36,661 0

வராஹி 31.10 16.94 8,810 0

ஹாரங்கி 8.50 7.83 12,317 7,666

ஹேமாவதி 37.10 36.23 26,600 16,935

கே.ஆர்.எஸ்., 49.45 46.70 68,192 1,07,783

கபினி 19.52 18.95 57,819 80,000

பத்ரா 71.54 68.01 20,774 1,964

துங்கபத்ரா 105.79 100.68 1,31,821 93,979

கட்டபிரபா 51.00 47.16 38,012 35,721

மலபிரபா 37.73 30.57 7,707 4,177

அலமாட்டி 123.08 67.86 2,02,573 3,02,573

நாராயணபுரா 33.31 23.50 2,90,646 2,96,577

வாணிவிலாஸ்

சாகர் 30.42 18.35 4,737 147






      Dinamalar
      Follow us