ADDED : ஜூலை 12, 2024 07:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபுதாபி: யு.ஏ.இ., நாட்டின் முக்கிய சாலைக்கு 84 வயது இந்திய டாக்டர் ஜார்ஜ் மேத்யூ என்பவரின் பெயரிட்டு கவுரப்படுத்தியுள்ளது அந்நாட்டு அரசு.
கேரளாவைச்சேர்ந்த மருத்துவரான ஜார்ஜ் மேத்யூ84, கடந்த 1972 ம் ஆண்டு முதல் அந்நாட்டின் மண்டல மருத்துவ இயக்குனர் ,2001 ல் சுகாதார ஆணையத்தின் ஆலோசகர் என பல முக்கிய பதவிகளை வகித்தார். சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையில் இவரது சேவையை பாராட்டி, கவுரவிக்கும் விதமாக யு.ஏ.இ., நாட்டின் அபுதாபியில் உள்ள ஷேக் ஷக்பூத் மெடிக்கல் நகர் அருகே உள்ள முக்கிய சாலைக்கு ஜார்ஜ் மேத்யூ என பெயரிட்டுள்ளது. இதற்கு அபுதாபி நகராட்சி நிர்வாகம், சாலை போக்குவரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.