sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பதவியேற்ற அமைச்சர்களின் பயோ டேட்டா...

/

பதவியேற்ற அமைச்சர்களின் பயோ டேட்டா...

பதவியேற்ற அமைச்சர்களின் பயோ டேட்டா...

பதவியேற்ற அமைச்சர்களின் பயோ டேட்டா...

2


ADDED : ஜூன் 10, 2024 12:11 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 12:11 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோடி, பிரதமர் 73

தொகுதி : வாரணாசி, உபி.,

படிப்பு : எம்.ஏ.,

பிறப்பிடம் : குஜராத்

சிறுவயதில் ரயில் நிலையத்தில் டீ விற்பனை செய்தார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் பணியாற்றினார். 1987ல் பா.ஜ., வில் இணைந்தார். 1995ல் தேசிய செயலர் மற்றும் ஐந்து மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்தார். 1998ல் பா.ஜ., பொதுச்செயலர். 2001ல் குஜராத் முதல்வரானார். பின் 2002, 2007, 2012 என நான்கு முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். 2014, 2019ல் பிரதமரானார். 2024ல் மூன்றாவது முறை பதவியேற்றார்.

***

ராஜ்நாத் 72,

தொகுதி : லக்னோ, உபி.,

படிப்பு : எம்.எஸ்சி.,

பிறப்பிடம் : உ.பி.,

இயற்பியல் பேராசிரியர், மாநில அமைச்சர், மாநில முதல்வர், எம்.பி., மத்திய அமைச்சர், பா.ஜ., கட்சி தலைவர் என பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 1994ல் ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1999ல் வாஜ்பாய் அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சரானார். 2000ல் உ.பி., முதல்வராக இருந்தார். 2013 - 14ல் பா.ஜ., தேசிய தலைவராகபணியாற்றினார். 2019ல் ராணுவ அமைச்சராக இருந்த இவர், மீண்டும் அதே பதவியில் தொடர்கிறார்.

******

அமித்ஷா 60,

தொகுதி :காந்திநகர், குஜராத்

படிப்பு : பி.எஸ்சி.,

பிறப்பிடம் : மஹாராஷ்டிரா

ஆர்.எஸ்.எஸ்.,சில் பணியாற்றினார். 1986ல் பா.ஜ.,வில் சேர்ந்தார். 1995ல் குஜராத்தில் பா.ஜ.,வை வளர்ப்பதில் மோடியுடன் இணைந்து பணியாற்றினார். குஜராத்தில் 2002ல் மோடி அமைச்சரவையில் உள்துறை உட்பட 12 துறைகள் வழங்கப்பட்டன. 2014ல் இவர் பா.ஜ., தேசிய தலைவரான பின், பல மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. 2019ல் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற இவர், அதே பதவியில் தொடர்கிறார்.

***

நிதின் கட்காரி 67

தொகுதி: நாக்பூர், மஹாராஷ்டிரா

படிப்பு : எம்.காம்., சட்டம்

பிறப்பிடம் : மஹாராஷ்டிரா

ஆர்.எஸ்.எஸ்.சில் பணியாற்றியவர். 1995ல் மஹாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சராக இருந்துள்ளார். மாநில எதிர்க்கட்சி தலைவர், மாநில பா.ஜ., தலைவர், பா.ஜ., தேசிய தலைவர் பொறுப்புகளை வகித்துள்ளார். 2014, 2019ல் சாலை போக்குவரத்து அமைச்சராக இருந்த இவர் நாடு முழுதும் சாலை பணிகளை விரைவுபடுத்தி எதிர்க்கட்சிகளின் பாராட்டை பெற்றார். அதே பதவியில் நீடிக்கிறார்.

***

ஜெ.பி.நட்டா 63

தொகுதி : ராஜ்யசபா எம்.பி.,

படிப்பு : பி.ஏ., பி.எல்.,

பிறப்பிடம் : பீஹார்

ஜெயப்பிரகாஷ் நாராயணின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். 1993, 1998 மற்றும் 2007 என மூன்று முறை ஹிமாச்சல் சட்டசபைக்கு எம்.எல்.ஏ., ஆனார். 2014ல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார். 2020ல் பா.ஜ., தேசிய தலைவரானார்.

***

சிவராஜ் சிங் சவுகான் 65

தொகுதி : விடிசா, ம.பி.,

படிப்பு : எம்.ஏ.,

பிறப்பிடம் : ம.பி.,

1990ல் ம.பி., சட்டசபைக்கு தேர்வானார். 1991 - 2005 வரை லோக்சபா எம்.பி.,யாக இருந்தார். ம..பி., முதல்வராக 2005 - 2018, 2020 - 2023 வரை பதவி வகித்தார். 2019ல் பா.ஜ., துணை தலைவராக பதவி வகித்தார். முதன்முறை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

***

நிர்மலா சீதாராமன் 64

தொகுதி : ராஜ்யசபா எம்.பி.,

படிப்பு : எம்.ஏ.,

பிறப்பிடம் : தமிழகம்

பிரிட்டனில் பொருளாதார உதவியாளர், மேலாளராக சில காலம் பணியாற்றினார். பா.ஜ.,வில் 2008ல் சேர்ந்தார். கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தார். தேசிய பெண்கள் அமைப்பின் உறுப்பினராக இருந்தவர். ராஜ்யசபா எம்.பி.,யான இவர், 2014 - 2019ல் வர்த்தகம், பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தார். 2019ல் நிதித்துறை அமைச்சரானார். மீண்டும் அதே பதவியை தக்க வைத்துள்ளார்.

***

ஜெய்சங்கர் 69,

தொகுதி : ராஜ்யசபா எம்.பி.,

படிப்பு : எம்.ஏ., பி.எச்டி., ஐ.எப்.எஸ்.,

பிறப்பிடம் : டில்லி

ஐ.எப்.எஸ்., முடித்த இவர், ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்திய துாதராக பணியாற்றினார். இந்திய வெளியுறவுத்துறை செயலராக இருந்துள்ளார். 2019ல் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

***

மனோகர் லால் கட்டார் 70,

தொகுதி : கர்னல், ஹரியானா

படிப்பு : பி.ஏ.,

பிறப்பிடம் : ஹரியனா

1977ல் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். 1994ல் பா.ஜ.,வில் சேர்ந்தார். 2000 - 2014 வரை அரியானா மாநில பா.ஜ., பொதுச் செயலராக பதவி வகித்தார். 2014 - 2024 வரை ஹரியானா முதல்வராக இருந்தார். முதல்முறை மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

***

குமாரசாமி 64

தொகுதி : மாண்டியா, கர்நாடகா

படிப்பு : பி.எஸ்.சி.,

பிறப்பிடம் : கர்நாடகா

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன். 2023 முதல் மதச்சார்பற்ற ஜனாத தளம் தலைவராக உள்ளார். இரண்டு முறை கர்நாடக முதல்வராக பதவி வகித்தார். முதல்முறையாக மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

***

பியுஷ் கோயல், 60

தொகுதி : மும்பை வடக்கு, மஹாராஷ்டிரா

படிப்பு : சி.ஏ., சட்டம்

பிறப்பிடம் : மஹாராஷ்டிரா

பட்டைய கணக்காளர், சட்டப்படிப்பில் மும்பை பல்கலையில் இரண்டாவதாக தேர்வானவர். நிதி, பாதுகாப்பு தொடர்பான பார்லி நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். பா.ஜ.,வில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2019ல் வர்த்தக துறை அமைச்சர், 2021ல் ஜவுளித்துறை அமைச்சரானார்.

***

தர்மேந்திர பிரதான்

தொகுதி : தியோகார்க், ஒடிசா

படிப்பு : எம்.ஏ.,

பிறப்பிடம் : ஒடிசா

பா.ஜ., மாணவர் அமைப்பில் 1995ல் சேர்ந்தார். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளராக இருந்துள்ளார். 2004 லோக்சபா எம்.பி., ஆனார். 2012 மற்றும் 2018ல் ராஜ்யசபாவுக்கு தேர்வானார். 2014ல் பெட்ரோலியம், 2019ல் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

***

ஜிதன் ராம் மஞ்சி 79,

தொகுதி : கயா, பீஹார்

படிப்பு : பி.ஏ.,

பிறப்பிடம் : பீஹார்

1980ல் முதன்முறை எம்.எல்.ஏ., ஆனார். காங், ஆர்.ஜே.டி., ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்துள்ளார். 2014 - 2015ல் பீஹார் முதல்வராக பதவி வகித்தார். 2015ல் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியை தொடங்கினார். முதன்முறை மத்திய அமைச்சரானார்.

***

சர்பானந்த சோனேவால், 61

தொகுதி : திப்ருஹார்க், அசாம்

படிப்பு : பி.ஏ, பி.எல்.,

பிறப்பிடம் : அசாம்

2001ல் அசாம் எம்.எல்.ஏ., ஆனார். 2012ல் அசாம் மாநில பா.ஜ., தலைவராக பொறுப்பேற்றார். 2014ல் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். 2016 - 2021 ல் அசாம் முதல்வராக இருந்தார். 2021ல் மத்திய துறைமுகம், ஆயுஷ் அமைச்சரானார்.

***

***

ஜிதேந்திர சிங், 67

தொகுதி: உதம்பூர், காஷ்மீர்

படிப்பு : எம்.பி.பி.எஸ்.,

மருத்துவ ஆலோசகராகவும், நீரிழிவு மற்றும் என்டோகிரியாலஜி துறையில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார். பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர், காஷ்மீர் தலைமை செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். 2014ல் முதல் மத்திய அமைச்சராக பதவி வகிக்கிறார்.

****






      Dinamalar
      Follow us