டில்லி டூ மும்பை சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆமதாபாத்தில் அவசர தரையிறக்கம்
டில்லி டூ மும்பை சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆமதாபாத்தில் அவசர தரையிறக்கம்
ADDED : ஜூன் 03, 2024 12:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் இருந்து மும்பை சென்ற ஆகாசா ஏர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் விமானம் ஆமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
டில்லியில் இருந்து மும்பைக்கு ஆகாசா ஏர் விமானம், 186 பயணிகள், 1 கைக்குழந்தை மற்றும் 6 பணியாளர்களுடம் புறப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பு கருதி, விமானம் அவசரமாக ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என ஆகாசா ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனைக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.