ADDED : ஜூலை 12, 2024 06:56 AM

மங்களூரு: கான்ஸ்டபிளிடம் லஞ்சம் வாங்கிய, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
மங்களூரு அருகே முடிபு பகுதியில் கர்நாடக ஆயுதப்படையின், 7வது பட்டாலியன் உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டராக வேலை செய்தவர் முகமது ஹாரிஸ், 38.
மங்களூரு அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் அமர்த்துவதற்கு, ஆயுதப்படையில் பணியாற்றும் ஏட்டு ஒருவரிடம், முகமது ஹாரிஸ், தொடர்ந்து லஞ்சம் வாங்கி வந்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக முகமது ஹாரிசுக்கு, ஏட்டு லஞ்சம் கொடுக்கவில்லை. இதனால், கோபம் அடைந்த முகமது ஹாரிஸ், லஞ்சம் தராவிட்டால் வேறு இடத்திற்கு மாற்றி விடுவதாக மிரட்டி உள்ளார்.
இது குறித்து லோக் ஆயுக்தாவில் ஏட்டு புகார் செய்தார். நேற்று முன்தினம் இரவு, ஆயுதப்படை பட்டாலியன் அருகே வைத்து, முகமது ஹாரிசுக்கு, ஏட்டு 18,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தார்.
அப்போது அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், முகமது ஹாரிசை கைது செய்தனர்.