இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடிவு: பிரதமர் மோடி
இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடிவு: பிரதமர் மோடி
UPDATED : ஜூன் 12, 2024 03:38 PM
ADDED : ஜூன் 12, 2024 03:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 'ஆந்திர மாநில இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்ற அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த புகைப்படங்களை எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
வாக்குறுதி
ஆந்திர மாநிலத்தின் புகழை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லவும், மாநில இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
வாழ்த்து
ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சராக பொறுப்பேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.