sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சி.ஆர்.பி.எப்., சமையலர்களுக்கு முதன்முறையாக பதவி உயர்வு

/

சி.ஆர்.பி.எப்., சமையலர்களுக்கு முதன்முறையாக பதவி உயர்வு

சி.ஆர்.பி.எப்., சமையலர்களுக்கு முதன்முறையாக பதவி உயர்வு

சி.ஆர்.பி.எப்., சமையலர்களுக்கு முதன்முறையாக பதவி உயர்வு


ADDED : ஜூன் 06, 2024 11:54 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, கடந்த, 85 ஆண்டுகளில் இல்லாத வகையில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் துணை ராணுவப் படையில் சமையல் வேலை மற்றும் தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் உள்ள 2,600 பேருக்கு, முதன்முறையாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

முப்படை


நம் நாட்டை பாதுகாக்கும் பணியில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ராணுவ அமைச்சகத்துக்கு கீழ் செயல்படும் இந்த முப்படைகளுக்கும் ஜனாதி பதியே தலைவராக உள்ளார்.

இதில் ராணுவத்தில் இருந்து வேறுபட்டு, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய துணை ராணுவப் படையினர் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த 1939ல் நிறுவப்பட்ட இந்த படை, உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. துவக்கத்தில் எல்லைகளை பாதுகாத்து வந்த துணை ராணுவப் படையினர், தற்போது, உள்நாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயங்கரவாதிகளையும், நக்சலைட்டுகளையும் வேட்டையாடி வரும் இந்த படையில், ஆண், பெண் என நான்கு லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இதில், சமையல் வேலை மற்றும் தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் மட்டும் 12,250 பேர் உள்ளனர். கான்ஸ்டபிள் பதவி அந்தஸ்தில் உள்ள இவர்களுக்கு, இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

ஹெட் கான்ஸ்டபிள்


இந்நிலையில், 85 ஆண்டுகளுக்கு பின், உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை அடுத்து, முதன்முறையாக இவர்களுக்கு ஹெட் கான்ஸ்டபிளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, துணை ராணுவப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த 1939 முதல் சமையல் வேலை மற்றும் தண்ணீர் சுமப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது இல்லை. ஒரு படை ஊக்கமுடன், நல்ல முறையில் செயல்படுவதற்கு இவர்கள் முக்கிய காரணிகளாக உள்ளனர்.

சமையல் வேலை மற்றும் தண்ணீர் சுமப்பவராக 30 ஆண்டுகள் பணியில் இருந்தாலும், அதே அந்தஸ்திலேயே அவர்கள் ஓய்வு பெறும் நிலை தொடர்ந்தது.

தற்போது, மத்திய அரசின் உத்தரவை அடுத்து, முதற்கட்டமாக 1983 - 2004 காலகட்டங்களில் பணி அமர்த்தப்பட்ட 1,700 சமையல்காரர்கள் மற்றும் 900 தண்ணீர் கொண்டு செல்பவர்களுக்கு ஹெட் கான்ஸ்டபிளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ளவர்களுக்கு படிப்படியாக பதவி உயர்வு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us