ஜார்க்கண்டில் என்கவுன்டர்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
ஜார்க்கண்டில் என்கவுன்டர்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
ADDED : ஜூன் 17, 2024 11:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஞ்சி: ஜார்க்கண்டில் நடந்த என்கவுன்டரில், 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த என்கவுன்டரில், 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஒரு பெண் உட்பட இரண்டு மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.