ADDED : ஜூலை 31, 2024 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறில் நேற்று முன்தினம் காலை முதல் பலத்த மழை பெய்த நிலையில், இரவில் தீவிரமடைந்து கொட்டித் தீர்த்தது. நேற்று காலை 8:00 மணிப்படி 24 செ.மீ., பதிவானது.
மூணாறு - உடுமலைப்பேட்டை ரோட்டில் கன்னிமலை, 8ம் மைல் மற்றும் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மூணாறில் பழைய அரசு கல்லுாரி, தேவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கேப் ரோடு ஆகிய பகுதிகளில் மண்சரிவும், பள்ளிவாசல் எஸ்டேட் பேக்டரி அருகே நிலச்சரிவும் ஏற்பட்டு மூணாறுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோடு வழியாக தேனிக்கு போக்குவரத்து தடை விதித்து, இடுக்கி மாவட்ட நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.