
உறுதிமொழி எடுப்போம்!
நாட்டின் பிரதமராக ராகுல் வர வேண்டும் என, ஆந்திர முன்னாள் முதல்வர், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி விரும்பினார். இதை நிறைவேற்ற பாடுபடுவோர் தான், அவரது உண்மையான தொண்டர்கள். ராகுலை பிரதமராக்க உறுதிமொழி எடுப்போம்.
ரேவந்த் ரெட்டி
தெலுங்கானா முதல்வர், காங்.,
நீண்ட காலம் நிலைக்காது!
லோக்சபா தேர்தலில், 100 இடங்களை கூட பெறவில்லை. ஆனால், பெரிதாக எதையோ சாதித்து விட்டதாக காங்., தலைவர்கள் நினைக்கின்றனர். அவர்களது பெருமை நீண்ட காலம் நிலைக்காது. வரவிருக்கும் சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் தோற்கும்.
சிராக் பஸ்வான்
மத்திய அமைச்சர்,
லோக் ஜனசக்தி
சட்டப்படி நடவடிக்கை!
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, குற்றவாளிகளை நாங்கள் பாதுகாப்பதாக எதிர்க்கட்சியினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். சட்டம் - ஒழுங்கு தொடர்பான விஷயத்தில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏக்நாத் ஷிண்டே
மஹாராஷ்டிரா முதல்வர்,
சிவசேனா