
பொறுத்துக்கொள்ள முடியாது!
மேற்கு வங்கத்தில் ஊடுருவலை நியாயப்படுத்துவதற்காக, வங்கதேசத்தில் இருந்து வருவோருக்கு அடைக்கலம் கொடுக்க தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி கூறுகிறார். நாட்டின் ஒருமைப்பாட்டை பலவீனப்படுத்தும் இதுபோன்ற முயற்சியை பொறுத்துக் கொள்ள முடியாது.
ரவிசங்கர் பிரசாத்
முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,
80 முறைக்கு மேல் திருத்தம்!
நேரு முதல் இந்திரா வரை, பின்னர் மன்மோகன் சிங் ஆட்சி வரை, காங்., ஆட்சி காலத்தில், 80 முறைக்கு மேல் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அரசியலமைப்பு சட்டத்தின் சாரத்தையே காங்கிரஸ் அழித்து விட்டது.
அனுராக் தாக்குர்
முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,
எதுவும் சொல்லாதீங்க!
பிஜு ஜனதா தளத்தில், வி.கே.பாண்டியனால் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி. நான் ஏற்கனவே கூறியது போல், ஒடிசாவுக்கும், கட்சிக்கும் அர்ப்பணிப்புடனும், திறமையுடனும், நேர்மையுடனும் அவர் சேவை ஆற்றிஉள்ளார். அவரைப் பற்றி வதந்தியை பரப்பக் கூடாது.
நவீன் பட்நாயக்
முன்னாள் முதல்வர், பிஜு ஜனதா தளம்