
பார்லி.,யில் கேள்வி கேட்போம்!
மணிப்பூரில் கலவரம் ஏற்பட்ட பின், மூன்று முறை அங்கு சென்றுஇருக்கிறேன். நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாநிலம் இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்த அவலத்திற்கு முடிவு கட்டி அமைதியை கொண்டு வர, மணிப்பூர் பிரச்னை குறித்து முழு பலத்துடன் பார்லி.,யில் கேள்வி எழுப்புவோம்.
ராகுல்
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்
மும்பையில் அரசியல் சங்கமம்!
முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில் பங்கேற்க மும்பை செல்கிறேன். அங்கு உத்தவ் தாக்கரே, சரத் பவார் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்து பேச உள்ளேன். லோக்சபா தேர்தலுக்கு பின் நாங்கள் முதல் முறையாக சந்திக்க உள்ளோம்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர்,
திரிணமுல் காங்.,
அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி!
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கிடைத்த 100 கோடி ரூபாயை, கோவா தேர்தலுக்காக கெஜ்ரிவால் பயன்படுத்தி உள்ளார். இந்த ஊழல், அவர் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. தற்போது டில்லியை கொள்ளைஅடிக்க ஆம் ஆத்மியுடன், காங்கிரசும் இணைந்து உள்ளது.
அஸ்வினி வைஷ்ணவ்
ரயில்வே அமைச்சர், பா.ஜ.,