Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ புதுமண தம்பதி தற்கொலை

புதுமண தம்பதி தற்கொலை

புதுமண தம்பதி தற்கொலை


ADDED : மே 16, 2024 04:38 AM

Follow on Google

ADDED : மே 16, 2024 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயபுரா : புதமண தம்பதி, தற்கொலை செய்து கொண்டார்.

விஜயபுரா நகரின், சித்தேஸ்வரா லே அவுட்டில் வசித்தவர் மனோஜ்குமார் போளா, 30. இவரது மனைவி ராக்கி, 23. இவர்கள் பரஸ்பரம் காதலித்தனர். பெற்றோரின் சம்மதத்துடன் நான்கு மாதங்களுக்கு முன், திருமணம் செய்து கொண்டனர்.

தம்பதி அன்யோன்யமாக குடும்பம் நடத்தினர். மனோஜின் தாயார் பாரதி, தன் மகளின் ஊருக்கு சென்றிருந்தார். வீட்டில் இருந்த மனோஜ்குமார், ராக்கி தம்பதி நேற்று முன்தினம் இரவு, திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று காலை பாரதி வீட்டுக்கு வந்த போது, மகனும், மருமகளும் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம், பக்கத்தினர் உதவியுடன், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த ஜலநகர் போலீசார், இருவரின் உடல்களை மீட்டனர். புதுமண தம்பதியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap