sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபரிமலையில் ஆடி மாத பூஜை வரும் 15ம் தேதி நடை திறப்பு

/

சபரிமலையில் ஆடி மாத பூஜை வரும் 15ம் தேதி நடை திறப்பு

சபரிமலையில் ஆடி மாத பூஜை வரும் 15ம் தேதி நடை திறப்பு

சபரிமலையில் ஆடி மாத பூஜை வரும் 15ம் தேதி நடை திறப்பு


ADDED : ஜூலை 10, 2024 02:05 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் ஆடி 1, ஜூலை 17-ல் வருகிறது. ஆனால், கேரளாவில் ஜூலை 16ல் ஆடி 1 வருகிறது. இதனால், சபரிமலை நடை ஜூலை 15 மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஜூலை 16 அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் தந்திரி மகேஷ் மோகனரரு அய்யப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்திய பின், நெய்யபிஷேகத்தை துவக்கி வைப்பார். எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை, இரவு, 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். காலை முதல் இரவு வரை நடைபெறும் உதயாஸ்தமன பூஜையும் உண்டு.

ஜூலை 20 இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் போது, இந்த தேதி மாற்றத்தை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என, தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us
      Arattai