UPDATED : ஜூலை 31, 2024 04:30 AM
ADDED : ஜூலை 30, 2024 08:34 PM

புதுடில்லி: கேரளாவில் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட காங். எம்.பி. ராகுல் இன்று (ஜூலை 31) வயநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இரு சம்பவங்களில் இதுவரை 116 பேர் பலியாகியுள்ளனர். பலர் மண்ணில் புதையுண்டனர்.
இந்நிலையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங். எம்.பி.யுமான ராகுல் இன்று (ஜூலை 31) வயநாடு செல்ல உள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை பார்வையிட உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
காலை 9:30 மணி முதல் 12: 30 மணிவரை மைசூரிலிருந்து சாலை மார்க்கமாக மெப்பாடி, வயநாடு சென்று மெப்பாடி அரசு உயர்நிலை பள்ளி, செயின்ட் ஜோசப் யு.பி பள்ளி, டபிள்.யூ.ஐ.எம்.எஸ்., மெப்பாடி மருத்துவமனை ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்திக்கிறார்.
2:30 மணி முதல் மெப்பாடி மைசூர் சாலை.
5:45 மணி முதல் 8:30 மணி வரை மைசூர்- டில்லி