ADDED : ஜூலை 31, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஞ்சி, ஜார்க்கண்டின் ராஞ்சி மாவட்டத்தில் மாண்டர் பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில், 30 வயது பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதேபோல் ராஞ்சி மாவட்டத்தின் சான்ஹோ பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலியானார்.
இதுதவிர, சாத்ரா மாவட்டத்தில் 12 வயது சிறுவன், 6 வயது சிறுமி, 55 வயது பெண் என மூன்று பேர் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, சாம்போ கிராமத்தில் மின்னல் தாக்கி, நான்கு பேர் காயமடைந்தனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.