தெலுங்கானாவி்ல் சந்திரசேகரராவ் கட்சி எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டம்
தெலுங்கானாவி்ல் சந்திரசேகரராவ் கட்சி எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டம்
UPDATED : ஜூன் 24, 2024 07:22 PM
ADDED : ஜூன் 24, 2024 06:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத்: தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி எம்.எல்.ஏ., காங்., கட்சியில் இணைந்தார்.
தெலுங்கானாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்., ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக ரேவந்த்ரெட்டி உள்ளார்.
இம்மாநிலத்தின் நிஜமாபாத் மாவட்டம் ஜக்தியால் தொகுதி பி.ஆர்.எஸ். எனப்படும் பாரதிய ராஷ்ட்ரீய சமீதி கட்சியைச் சேர்ந்த சஞ்சய்குமார் அக்கட்சியிலிருந்து விலகி காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
ஏற்கனவே இம்மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியடைந்த நிலையி்ல் தெலுங்கானா சட்டசபையில் பிரதான எதிர்கட்சியான பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் பலம் குறைந்துள்ளது.