ADDED : ஜூன் 07, 2024 08:05 PM
புதுடில்லி:-புவனேஸ்வர் - புதுடில்லி தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், காஜியாபாத் நிலையத்தில் நேற்று காலை 9:35 மணிக்கு தடம் புரண்டது.
இதுகுறித்து, வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தீபக் குமார் கூறியதாவது:
புவனேஸ்வர் - புதுடில்லி தேஜஸ் ராஜ்தானி விரைவு ரயில் நேற்று காலை 9:35 மணிக்கு, டில்லி அருகே காஜி-யாபாத் நிலையத்தைக் கடந்த போது தடம் புரண்டது. அப்போது, ரயில் மிகக் குறைவான வேகத்தில் சென்றதால், இந்த விபத்தில் பயணியருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தடம் புரண்ட பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்டன. அதில் இருந்த பயணியர் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர்.
இதையடுத்து, தேஜஸ் ரயில் காஜியாபாத்தில் இருந்து புறப்பட்டு புதுடில்லி ரயில் நிலையத்தை அடைந்தது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டது குறித்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.