மத்திய அமைச்சர் குமாரசாமி உடல் நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதி
மத்திய அமைச்சர் குமாரசாமி உடல் நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதி
ADDED : ஜூலை 28, 2024 07:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: மத்திய அமைச்சர் குமாரசாமியின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கர்நாடக மாநிலத்தில் இருந்து எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்தவர் குமாரசாமி. தொடர்ந்து மத்திய அரசின் அமைச்சரவையிலும் இடம்பிடித்தார்.
இதனிடயே பெங்களூருவில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தபோது குமாராமியின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.