58 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் தானியங்கி ரயில் பாதுகாப்பு முறையினை காங்கிரஸ் ஏன் செயல்படுத்தவில்லை
58 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் தானியங்கி ரயில் பாதுகாப்பு முறையினை காங்கிரஸ் ஏன் செயல்படுத்தவில்லை
UPDATED : ஆக 02, 2024 07:41 AM
ADDED : ஆக 02, 2024 07:07 AM

புதுடில்லி: ரயில் விபத்துகள் குறித்து பார்லிமென்ட் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு 58 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தானியங்கி ரயில் பாதுகாப்பு திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பினார்.
வியாழன்று நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் ரயில் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் எம்.பிக்கள் கேட்ட கேள்விகளுக்கு மத்திய ரயிலவே அமைச்சர் மேலும் கூறியதாவது, ‛ ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற சிறிய நாடுகளில் 1970 மற்றும் 1980 காலகட்டத்தில் தானியங்கி ரயில்வே பாதுகாப்பினை செயல்படுத்தி வந்தனர்.
ஆனால், இந்தியாவில் 2014 ஆண்டு வரை அந்த தானியங்கி பாதுகாப்பு முறை நடைமுறைக்கு வரவில்லை. 58 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கி.மீ., தூரத்திற்கு கூட ரயில்வே தானியங்கி பாதுகாப்பு நடைமுறைக்கு வரவில்லை'
2006ல் நடைமுறைக்கு வந்த ரயில்வே மோதல் தடுப்பு முறை தோல்வி அடைந்ததால் அது கைவிடப்பட்டது. பிரதமர் மோடி பொறுப்பேற்ற காலம் முதல் இந்தியாவில் ரயில் விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளது. . இன்னும் 20 ஆண்டுகளில் நாடு முழுவதும் தானியங்கி ரயில்வே பாதுகாப்பு முறை நடைமுறைப்படுத்தப்படும்' இவ்வாறு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.