ADDED : ஜன 26, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ,பவுர்ணமியையொட்டி உத்தர பிரதேசத்தின் பாரூக்காபாத் பகுதியில் கங்கை ஆற்றில் குளிக்க பக்தர்கள் சிலர் ஆட்டோவில் நேற்று காலை சென்று கொண்டிருந்தனர்.
பரேய்லி - பரூக்காபாத் சாலையில் சுக்சுகி கிராமம் அருகே, எதிரே ர வந்த கன்டெய்னர் லாரி, பக்தர்கள் சென்ற ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. அதிகாலை நிலவிய கடும் மூடு பனி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் லாரியில் தப்பி ஓட்டம் பிடித்தார். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து 12 கி.மீ., தொலைவில் அந்த லாரி கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

