டில்லியில் 1.4 கிலோ தங்கம், ரூ.20 லட்சம் ரொக்கம் கொள்ளை: போலி போலீஸ் அதிகாரிகள் இருவர் கைவரிசை
டில்லியில் 1.4 கிலோ தங்கம், ரூ.20 லட்சம் ரொக்கம் கொள்ளை: போலி போலீஸ் அதிகாரிகள் இருவர் கைவரிசை
ADDED : செப் 15, 2025 10:46 PM

புதுடில்லி: டில்லியில் ஒரு தங்கம் உருக்கும் கடையில் போலீஸ் அதிகாரிகள் போல் வேடமிட்டு, 1.4 கிலோ தங்கம் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கத்தை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டில்லியில் உள்ள பார்ஷ் பஜார் பகுதியில் தங்கம் உருக்கும் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு இன்று பிற்பகல் 1.50 மணி அளவில் இருவர் போலீஸ் அதிகாரிகள் போல் தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட இருவர், கடையில் இருந்தவர்களை அச்சுறுத்தி, 1.4 கிலோ தங்கத்தையும் ரூ.20 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக, கடையின் நிர்வாகி போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
கொள்ளை சம்பவம் தொடர்பாக பார்ஷ் பஜார் காவல் நிலையத்திற்கு பிற்பகல் 2.50 மணிக்கு பிசிஆர் அழைப்பு வந்தது, அதைத் தொடர்ந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.தங்கம் உருக்கும் கடையின் உரிமையாளர் சங்கர் பூஜாரி, அளித்த புகாரில், இந்த கொள்ளை சம்பவம் நடந்த நேரத்தில் கடையில் விக்ரம், ஜீவன் மற்றும் விகாஸ் ஆகிய மூன்று ஊழியர்கள் இருந்ததாக குறிப்பிட்டார்.குற்றவாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடக்கிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.