ஸ்ரீ யோக முனீஸ்வர சுவாமி கோவிலில் 25வது ஆண்டு சிவராத்திரி விழா
ஸ்ரீ யோக முனீஸ்வர சுவாமி கோவிலில் 25வது ஆண்டு சிவராத்திரி விழா
ADDED : பிப் 29, 2024 11:12 PM
பெங்களூரு: பெங்களூரு பிரகாஷ்நகரில் உள்ள ஓம் புவனேஸ்வர ஸ்ரீ யோக முனீஸ்வர சுவாமி கோவிலில் 25வது ஆண்டு, சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.
பெங்களூரு பிரகாஷ்நகர் 7வது கிராஸ் 1 வது மெயின் ரோட்டில், ஓம் புவனேஸ்வர ஸ்ரீ யோக முனீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. வரும் 8ம் தேதி 25வது ஆண்டு சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.
முன்னதாக வரும் 6ம் தேதி மதியம் அன்னதானம், மாலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க பிரகாஷ்நகர், தயானந்த நகர், ராமசந்திரபுரம், முத்தப்பா தோட்டம் வழியாக, திக்விஜய பவனி நடக்கிறது.
பவனி முடிந்ததும் கோவிலின் முன் அமைக்கப்படும் பந்தலில், தெய்வம் பதி அமர்த்தப்படுகிறது. அதன்பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
வரும் 7ம் தேதி காலையில் சக்தி கரகத்தை, கோவில் தலைவர் நமசிவாய சுவாமிகள் எடுக்கிறார். பின்னர், பால் குடங்களுடன் தட்டு வரிசைகள் மேள தாளத்துடன் ஊர்வலம்; மதியம் தீ மூட்டுதல் பூஜை நடக்கிறது. மாலையில் என்.கங்காதரன் சுவாமி கரகம் எடுத்து, தீ குண்டத்தில் இறங்குகிறார். பின்னர் கரக ஊர்வலம் நடக்கிறது.
வரும் 8ம் தேதி மாலையில் சுமங்கலி பூஜை; கைலாச தரிசனம்; இரவில் பக்தி பஜனை; நள்ளிரவில் முனீஸ்வர சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம், மங்களாரத்தி நடக்கிறது. விழா பொறுப்புகளை என்.சங்கர் சுவாமி செய்கிறார்.
வரும் 10ம் தேதி அமாவாசை அன்று, கோவிலில் கட்டு உடைக்கும் பூஜை நடக்கிறது.

